திருக்குறள்

1204.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ உளரே அவர்.

திருக்குறள் 1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ உளரே அவர்.

பொருள்:

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.

மு.வரததாசனார் உரை:

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?.

சாலமன் பாப்பையா உரை:

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.